Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆயிரத்தில் ஒருவன் 2 பற்றி தனுஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்! அப்போ தரமான சம்பவம் காத்திருக்கு

இவரின் படங்களை பார்த்தால் பிடிக்காது பார்க்கப்பார்க்க தான் பிடிக்கும் என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு வழக்கு உண்டு. முதலில் நெகட்டிவ் விமர்சனமே வரும், பின்னர் போக போக கொண்டாட ஆரம்பிப்பர். ஆம் செல்வராகவனை பற்றி தான் சொல்கிறோம். தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவர்.

அண்ணனும் தம்பியும் இணையம் பட்சத்தில் கட்டாயம் படம் ஹிட் எனபது எழுதப்படாத ரூல்ஸ் தான். இந்த ஜோடியும் யுவனும் சேரும் பட்சத்தில் வேற லெவல் தான். பலரும் செல்வாவிடம் கேட்பது, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போ வரும் என்பது. செல்வாவும் தான் ஸ்க்ரிப்ட் வேலையில் உள்ளதாக தெரிவிப்பார்.

புத்தாண்டை முன்னிட்டு தனுஷ் கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவன் 2 வரும் என போஸ்டர் வெளியிட்டார் செல்வா. முதல் பார்ட்டில் பார்த்திபன் ரோலில் நடிக்க செல்வா நினைத்தது தனுஷை தான். எனினும் அப்பொழுது அது ஒர்க் அவுட் ஆகவில்லை. தற்பொழுது தொடரும் சோழனின் பயணத்தில் தனுஷ் நடிக்கிறார். எனினும் ஷூட்டிங் நடிகர், நடிகையர், தயாரிப்பாளர் யார் என எதுவும் சொல்லாமல் படம் 2024 இல் ரிலீஸ் என சொல்லியுள்ளார்.

இதனை பற்றி தனுஷ் ட்வீட் செய்துள்ளார். “பிரம்மாண்ட படைப்பு. ப்ரீ ப்ரொடக்ஷன் மட்டுமே சுமார் ஒரு வருடம் வேலை உள்ளது. மாஸ்டர் செல்வராகவனின் கனவு படம். நீண்ட காத்திருப்பு. ஆனால் எங்களால் முடிந்த அளவுக்கு உழைத்து, சிறந்த படத்தை கொடுப்போம். ஆயிரத்தில் ஒருவன் 2 . இளவரசன் 2024 இல் வருகிறான்.” என பதிவிட்டுள்ளார்.

ao 2

எனவே கார்த்தி தூக்கி செல்லும் இளவரசன் ரோலில் தான் தனுஷ் நடிக்கிறார். அப்படியே விட்ட இடத்தின் தொடர்ச்சியாக செல்லும் படம் எனபது மட்டும் உறுதியாகி உள்ளது.

Continue Reading
To Top