ராயனின் அடுத்த சம்பவம்.. வித்தியாசமான டைட்டிலுடன் வெளியான போஸ்டர்

Dhanush: தனுஷ் ஒரு பன்முகத்தன்மை கொண்டவர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். நடிப்பு, பாடகர் என்பதை தாண்டி இப்போது இயக்கத்திலும் பட்டையை கிளப்பி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் ராயன் படம் வெளியானது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது தனுஷ் மீண்டும் தன்னுடைய இயக்கத்தில் ஒரு படத்தை நடிக்க இருக்கிறார். அதாவது ராயன் படத்தை தொடர்ந்து நாலாவதாக ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு இட்லி கடை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான டைட்டில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இட்லி கடை படத்தை டாவன் பிக்சர்ஸ், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

தனுஷின் இட்லி கடை போஸ்டர்

dhanush-idlikadai
dhanush-idlikadai

ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதில் அசோக் செல்வன் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். மேலும் நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியாரும் நடிக்கிறார்கள்.

ஏற்கனவே நித்யா மேனன் மற்றும் தனுஷ் காம்போவில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மீண்டும் இவர்கள் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அதோடு இப்படத்தின் முதற்கட்ட சூட்டிங் தேனியில் தொடங்கப்பட்டிருக்கிறது.

மேலும் இட்லி கடை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதால் எப்படிப்பட்ட கதைகளத்துடன் இந்த படம் நகரும் என்பது யூகிக்க முடியாமல் இருக்கிறது. கண்டிப்பாக ராயன் அடுத்த சம்பவத்திற்கு தயாராகிறார் என்பது இட்லி கடை போஸ்டர் மூலம் தெரிகிறது.

முழு வீச்சில் இறங்கிய தனுஷ்

- Advertisement -spot_img

Trending News