கோலிவுட்டில் பிஸியாக நடித்துவரும் தனுஷ், இந்த வருடம் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவேண்டி இருந்தது. மார்ஜனே சத்ரபி இயக்க இருந்த இப்படம் தற்போது பட்ஜெட் கிடைக்காததால் டிராப் ஆகி விட்டதாம்.

எனவே கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்த கையோடு வெற்றிமாறனின் வட சென்னையில் நடிக்க கிளம்பிவிடுவாராம் தனுஷ். தற்சமயம் இவர் கௌதமின் என்னை நோக்கி பாயும் தோட்டாவில் நடித்து வருகிறார்.