Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷின் ஹாலிவுட் படத்தின் தமிழ் டைட்டில் இதுதான்!

தமிழில் நல்ல பெர்ஃபாமர் என்று பெயர் வாங்கிய தனுஷ் ரஞ்சனா படம் மூலம் பாலிவுட்டுக்குச் சென்றார். அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அமிதாப் பச்சனுடன் அவர் இணைந்து நடித்த ஷமிதாப் பெரிய ஹிட்டடித்தது.

Dhanush

கோலிவுட் டூ பாலிவுட் என்ற தனுஷின் பயணம் இயக்குநர் கென் ஸ்காட் மூலம் ஹாலிவுட்டுக்கும் சென்றது. தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹீ ட்ராப்டு இன் இகியா வார்ட்ரோப் என்ற தலைப்பில் வெளியான ருமைன் போர்டுலாஸின் நாவலை, கனடாவைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார்.
இதில், நடிகர் தனுஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இம்மாதம் 30-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், பிரான்ஸின் கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷின் முதல் ஹாலிவுட் படம் திரையிடப்பட இருக்கிறது. அந்த விழாவில் கலந்துகொண்டுள்ள தனுஷ், படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். இயக்குநர் கென் ஸ்காட் உள்ளிட்டோருடன் அளவளாவும் புகைப்படங்களையும் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

dhanush

இந்தநிலையில், இந்த படத்தின் தமிழ் பதிப்பின் தலைப்பையும் நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். தனுஷின் முதல் ஹாலிவுட் திரைப்படம் `வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்ற தலைப்பில் தமிழில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலா ஆடியோ லான்ச் பங்ஷன் சக்ஸஸைத் தொடர்ந்து பிரான்ஸ் சென்றுள்ள தனுஷ், தனது முதல் ஹாலிவுட் படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top