நம் கோலிவுட்டில் பன்முகக் கலைஞன் என்றால் அது தனுஷ் தான். நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று சினிமாவில் பல துறைகளில் கலக்கி வருபவர். நம் உள்ளூரில் கலக்கி கொண்டிருந்த தனுஷ் ஹாலிவுட் படம் நடிப்பது பற்றிய தகவல்கள் முன்பே வெளியானது.

ரோமன் பியூட்ரோலஸ் எழுதிய நாவலின் தழுவல் தான் இப்படம்.{The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe. novel by Romain Puertolas.}

படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனுஷின் சில ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போட்டோக்கள் இணையத்தில் நல்ல ரீச் ஆகியுள்ளது.

அதிகம் படித்தவை:  தமிழ் டப்பிங்கில் கலக்கும் Deadpool-2 ட்ரைலர்.!
Dhanush
Dhanush
Dhanush
Dhanush
படத்தின் கதை :

இப்படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தின் பெயர் ‘அஜெத்தாசத்ரு ஓகாஷ் ரதோட்’. ராஜஸ்தானில் வசிக்கும் இவர் தனக்கு மந்திர சக்திகள் இருப்பதாக தன ஊர் மக்களை நம்ப வைக்கிறார். அவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து பாரிஸ் நகர் நோக்கி பயணம் மேற்கொள்கிறார்.

எனினும் ஆணியில் ஆன படுக்கை வாங்க பாரிஸில் உள்ள ikea ஸ்டோரிற்கு செல்வதாக மக்களை நம்ப வைக்கிறார். ஆனால் இவர் பயணத்தின் முக்கிய நோக்கம் தன தந்தையை கண்டு பிடிப்பதே ஆகும். அவர் செல்லும் நாடுகள், அவர் சந்திக்கும் நபர்கள் என்று நகருமாம் திரைக்கதை. முதலில் ஒரு கப்-போர்டு, பின்னர் சூட் கேஸ், ஹாட் ஏர் பலூன், டாக்ஸி, லாரி என்று மாறி மாறி படம் முழுக்க பயணம் செய்வாராம் பாகிர் தனுஷ்.

அதிகம் படித்தவை:  திருமணத்திற்கு முன்னர் உறவு: கதிகலங்க வைக்கும் கொடூர தண்டனை

விரைவில் பட ரிலீஸ் பற்றிய தகவல்கள் வெளியாகுமாம்.