Connect with us
Cinemapettai

Cinemapettai

மாஸ்டர் இடைவேளையில் தனுஷ் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்.. இது எப்படி இருக்கு!

vijay-dhanush-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் இடைவேளையில் தனுஷ் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்.. இது எப்படி இருக்கு!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தின் இடைவெளியில் தனுஷ் ஒரு சர்ப்ரைஸ் தர உள்ள செய்தி ரசிகர்களிடையே குத்தாட்டம் போட வைத்துள்ளது.

நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு ஒரு விடிவு காலம் வந்துவிட்டது என்றே சொல்லலாம். எப்படியோ போராடி மாஸ்டர் படத்தை வருகிற பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்து விட்டனர்.

இதற்கான புரோமோஷனல் தற்போது பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. மேலும் நூறு சதவிகித பார்வையாளர்களை திரையரங்குகளில் அனுமதிக்க அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

தியேட்டர்காரர்களும் பாதுகாப்புடன் மாஸ்டர் படத்தை திரையிட ஆயத்தமாகி வருகின்றனர். விஜய் படம் மட்டுமே தியேட்டர்களுக்கு மீண்டும் மக்களை வரச் செய்யும் என்ற நம்பிக்கையில் மாஸ்டர் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு நடிகர் தனுஷ் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். மாஸ்டர் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததிலிருந்து மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கும் வரை அனைத்திற்கும் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ளார்.

அதற்கு காரணம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர் படத்தின் இடைவேளையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறதாம். இதன் காரணமாகவே தனுஷ் விஜய்யின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து ஆதரித்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

karnan-cinemapettai

karnan-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top