Tamil Cinema News | சினிமா செய்திகள்
யோகிபாபு திருமணத்திற்கு தனுஷ் கொடுத்த கிப்ட்.. கொடைவள்ளல் கர்ணன்
தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது யோகிபாபுவின் திடீர் திருமணம் பற்றிதான். தளபதி முதல் தலைவர் வரை அனைவருமே யோகிபாபுவின் திருமணத்தை எதிர்பார்த்து மேடையில் கூறியிருந்தார்கள். ஆனால் யோகி பாபு யாருக்கும் சொல்லாமல் திடீரென திருமணத்தை நடத்தி முடித்துவிட்டார்.
தற்போது தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷுடன் முதல்முறையாக யோகி பாபு இணைந்து நடித்து வருகிறார். இதனாலேயே இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.
திருமணத்திற்கு பிறகு யோகி பாபு கர்ணன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதற்கு திடீரென தனுஷ் தங்கச் சங்கிலி ஒன்றை பரிசளித்து யோகி பாபு திருமண வாழ்த்து கூறியுள்ளார். இதனை கண்ட யோகிபாபு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

dhanush-yogi-babu
தனுஷ் எப்போதுமே தன்னுடன் நடிக்கும் நடிகர்களை பெருமைப்படுத்தி பார்ப்பதில் வல்லவர். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் கர்ணன் படம் மே மாத வெளியீடாக வெளிவரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனுஷ் தங்க மகன் என்பதில் சந்தேகமில்லை..
