Connect with us
boomerang-movie

செண்டிமெண்ட் காரணத்தால் இணைந்த தனுஷ் – கெளதம் மேனன் ! வெளிவந்த தகவல்

News | செய்திகள்

செண்டிமெண்ட் காரணத்தால் இணைந்த தனுஷ் – கெளதம் மேனன் ! வெளிவந்த தகவல்

dhanush-gautham-menonதனுஷ் இப்போது துரைசெந்தில்குமார் இயக்கும் கொடி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அடுத்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கெளதம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்று முன்பே வந்திருந்த செய்தி. அந்தச் செய்தியை, கொடி படப்பிடிப்பில் இருந்தபடியே உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

அதில், பல ஆண்டுகளாகப் பேசிக்கொண்டிருந்த விசயம் முடிவுக்கு வந்திருக்கிறது, அடுத்து கௌதம்வாசுதேவ்மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப்பாயும் தோட்டா என்கிற படத்தில் நடிக்கிறேன், கொடி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் தனுஷ். இந்தத்தகவலில் பல ஆண்டுகளாகப் பேசியது என்று தனுஷ் குறிப்பிட்டிருப்பது எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

என்ன நடந்தது? என்று விசாரித்தால், கௌதமின் அப்பா வாசுதேவ் மரணமடைந்த நேரத்தில் கௌதம் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். அவர் தாயகம் திரும்புகிறவரை அவருடைய அப்பாவுக்கான இறுதிச்சடங்கு வேலைகளை உடனிருந்து கவனித்துக்கொண்டவர் தனுஷ்தானாம். இரவு முழுவதும் தூங்காமல் தனுஷ் இருந்தார் என்கிற தகவல் தெரிந்து கௌதம் மிகவும் உருகிவிட்டாராம்.

அதிலிருந்து இருவருக்குமிடையேயான நட்பு மிகவும் பலமாகிவிட்டதாம். அப்போதிருந்தே இருவரும் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்களாம். பல வருட பேச்சுகள் இப்போதுதான் செயலுக்கு வந்திருக்கிறதாம். அதனால்தான் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top