Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷுக்கும், கவுதம் மேனனுக்கும் இடையே பிரச்சனையா?: அப்போ இஎன்பிடி படம்?
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது.
டீஸர் அனைவரையும் கவர்ந்தது என்றே கூற வேண்டும்.
எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீஸாவதாக தெரியவில்லை. தனுஷ் விஐபி2 மற்றும் பவர் பாண்டி ஆகிய படங்களில் பிசியாகிவிட்டார். அவரின் வட சென்னை படமும் பாதியில் நிற்கிறது.
கவுதம் மேனன் விக்ரமை வைத்து இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திற்கு தான் முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்நிலையில் கவுதம், தனுஷ் இடையே பிரச்சனை என்று கூறப்படுகிறது.
எனை நோக்கி பாயும் தோட்டா படம் பாதியில் நிற்கிறது. படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்கு மேல் மீண்டும் தொடரலாம் என்று விபரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
படத்தில் காதலுக்காக தோட்டாவை ஏற்க துணிகிறார் தனுஷ். படம் காதலர் தின ஸ்பெஷலாக ரிலீஸாகும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையை பார்த்தால் அதற்கு வாய்ப்பே இல்லை.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
