முதல் முறையாக 50 கோடி சம்பளம் வாங்கும் தனுஷ்.. தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி!

செல்வராகவன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது உலக அளவில் பிரபலமானவர் தனுஷ். இவர் தற்போது தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து உள்ளார்.

இதைத்தவிர அடுத்தடுத்து 3 வருடங்களுக்கு கால்ஷீட் புக் செய்து வைத்துள்ளார். தெலுகுகில் தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் நடிக்க உள்ளார்.

தனுஷ் ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் செல்வராகவன் படத்தில் நடிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார். எப்படி இந்த இரண்டு படங்களையும் சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தனுஷ் டோலிவுட் நடிக்கப் போகும் முதல் படத்திலேயே 30 கோடி சம்பளம் என்று செய்திகள் பரவலாக பேசப்பட்டது. ஆனால் தற்போது கிட்டத்தட்ட 50 கோடி வரை சம்பளம் வாங்கும் உள்ளாராம்.

தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் அதிக பட்ஜெட்(120 கோடி) படம் மட்டுமில்லாமல் அதிக சம்பளம் வாங்கும் படமும் இதுவாகவே அமைந்துள்ளது. இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது, இதனால் தனுஷ் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இது முடித்தபின் செல்வராகவன் படத்தில் நடிக்கிறாரா இல்லை இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் படிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

dhanush-sekar-kammula
dhanush-sekar-kammula
- Advertisement -spot_img

Trending News