செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

அப்பா அண்ணன் என்று கொச்சைப்படுத்திய நயன்தாரா.. மதம் பிடித்த யானையாய் மாறிய தனுஷ்

தனுஷ், நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்களின் சண்டைதான் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் நெருப்பாய் பற்றி எரிகிறது. மற்றவர் படும் துன்பத்தை கண்டு தனுஷ் இன்பமடைகிறார் என்பதுதான் நயன்தாராவின் பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன் அவர் வெளியிட்ட அறிக்கை தனுசுக்கு எதிராக பூதாகரமாக வெடித்தது

இதற்காக ஒரு ஜெர்மனி வார்த்தையையும் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறார். “சேடன் ப்ருடே” என்று தனுசை நயன்தாரா குறிப்பிடுகிறார். அதற்கு அர்த்தம் துன்பப்படுத்தி சந்தோஷம் அடைவதுதான். தனுஷ் தங்களை இரண்டு வருட காலமாக துன்பப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று வெளிப்படையாக சொல்லிவிட்டார்.

அது மட்டும் இன்றி தனுஷ் தானாக முன்னுக்கு வரவில்லை அவருடைய அப்பா மற்றும் அண்ணன் இருவராலும் தான் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார். அவர்கள் இல்லை என்றால் தனுஷ் என்ற ஒருவர் எங்கேயும் இருந்திருக்க மாட்டார் என்றெல்லாம் நயன்தாரா வெளியிட்ட லெட்டர் பேடில் குறிப்பிட்டிருந்தார்.

கடின உழைப்பாலும் 15 வருட போராட்டத்தாலும் தான் நான் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன், உங்களுக்கு அமைந்தது போல் எளிதில் அரியாசனம் கிடைக்கவில்லை என்றெல்லாம் நயன்தாரா ஒரே போடாக போட்டு தனுசை அசிங்கப்படுத்தி விட்டார். இதனால் ஆவேசம் அடைந்த தனுஷ் அவர் பக்கமுள்ள நியாயத்தையும் கூறி வருகிறார்.

அப்பா அண்ணனால் வளரவில்லை தன்னுடைய கடினமான உழைப்பால் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று தனுஷ் பலமுறை நிரூபித்து விட்டார். நயன்தாராக்கு எதிராக ஆதரவு தெரிவித்த நடிகைகள் எல்லோரும் தனுஷ் வெளியிட்டி அறிக்கையால் இப்பொழுது நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்று ஆராய்ந்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News