இளம் இயக்குனருடன் சண்டை.. படத்தை தானே இயக்கி நடிக்கும் தனுஷ்?

தனுஷ் ஹாலிவுட் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ஹைதராபாத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் D43 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் செல்வராகவன் படம் தொடங்குகிறது.

அதே மாதத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D44 படமும் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் தனுஷ். அதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களும் கைவசம் இருக்கின்றன.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் D43 படப்பிடிப்பில் தனுஷுக்கும் கார்த்திக் நரேனுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கார்த்திக் நரேன் படத்தை பாதியில் கிளம்பி விட்டதாக ஒரு செய்தி வெளியானது.

அதனைத் தொடர்ந்து அந்த படத்தை தானே இயக்கி தனுஷ் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாக இணையமே பரபரப்பானது. அதுமட்டுமில்லாமல் தனுஷ் ரசிகர்களும் உண்மை தெரியாமல் குழம்பிக் கொண்டே இருந்தனர்.

இந்நிலையில் படக்குழு அதற்கு விடை கொடுத்துள்ளது. கார்த்திக் நரேன் மற்றும் தனுஷ் ஆகியோர் இடையே வாக்குவாதம் வந்தது உண்மைதான். ஆனால் ஒருவரது கருத்தை இன்னொருவர் ஏற்றுக் கொண்டதால் தற்போது சுமூகமாக படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மாதத்துடன் D43 படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மாஸ்டர் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்.

dhanush-karthik-naren
dhanush-karthik-naren
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்