தனுஷ் தற்போது கொடி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து வட சென்னை படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த மிரட்டு படம் என்ன ஆனது என்று பலருக்கும் தெரியவில்லை, இதுக்குறித்து விசாரிக்கையில் இதில் சில காட்சிகள் தனுஷிற்கு பிடிக்கவில்லையாம்.

மறுபடியும் ரீஷுட் செய்ய வேண்டுமென்று கூற, இதற்கு பிரபு சாலமன் மறுத்துள்ளார். இது தயாரிப்பாளருக்கு தேவையில்லாத செலவுகளை அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

ஆனால், தனுஷ் பிடிவாதமாக இருக்க, பின் இருவருக்குமிடையே படக்குழு பேசி சமரசம் செய்து அந்த காட்சிகளை மீண்டும் எடுத்துள்ளனர்.