தன்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அத்தனை சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் கண்கலங்கிய படி நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ்.

சினிமாவுக்கு வந்த 13 ஆண்டுகளில் 25 படங்கள், 27வது வயதில் தேசிய விருது, கொல வெறி என்ற ஒரே பாடலில் மாபெரும் புகழ் என தமிழ் சினிமாவில் உற்றுக் கவனிக்க வைக்கும் ஓர் ஆளுமை தனுஷ் .

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று விவாதிக்கப்பட்டுவரும் தருணத்தில் நாயகனுக்கும், சினிமாவுக்குமான ஊடாட்டத்தைப் பற்றிப் பேச வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. 2014-ன் சினிமா குறித்த எதிர்வினைகள் அதற்குப் பொருத்தமான சான்றுகளை முன்வைக்கின்றன.

தனுஷின் வருகை அண்மைக் காலத் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய மாற்றங்களுக்கு வித்திட்டது என உறுதியாக சொல்லலாம். 2002ல் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் கதாநாயகனாக தனுஷ் அறிமுகம் ஆனார். படம் ஓரளவு பேசப்பட்டதே தவிர, மறந்தும்கூட தனுஷின் பெயரை உச்சரிக்கவில்லை. ஆனால், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘காதல் கொண்டேன்’ தனி கவனம் பெற்றது. கதாநாயகனுக்கான ஆகிவந்த குணாம்சம் எதுவும் இல்லாத தனுஷை ‘காதல் கொண்டேன்’ தனித்துக் காட்டியது. அதற்குப் பிறகு ‘திருடா திருடி’ படத்தில் நடித்த தனுஷ் மன்மத ராசா பாடலால் உச்சத்துக்குச் சென்றார்.

ஒல்லியான தேகம், பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பையனைப் போன்ற தோற்றம் ஆகியவற்றின் மூலம் நாயகனுக்கான இலக்கணத்தை உடைத்தெறிந்தார் தனுஷ். ஒல்லிப்பிச்சான் என்று தன்னை நய்யாண்டி செய்தவர்களே கொண்டாடும் அளவுக்கு வளர்ந்தார். இத்தனைக்கும் எல்லா திறமைகளோடும் தனுஷ் சினிமா துறைக்குள் நுழைய வில்லை. ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டார்.

தனுஷுக்கு ‘புதுப்பேட்டை’ மிகச் சிறந்த அடையாளத்தைக் கொடுத்தது. சினிமாவுக்கு வந்த நான்காவது ஆண்டில் தனுஷ் ஒரு முழுமையான நடிகனாக தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டது இந்தப் படத்தில்தான்.

“தொண்டையில ஆப்ரேஷன், காசு கொடு” என்று பிச்சை எடுக்கும் தனுஷ் பின்னாளில் கொக்கி குமாராக அதில் பரிணாம வளர்ச்சி பெறுவதைப் பார்த்திருக்கலாம். ஒரு நடிகனாக, நிஜ வாழ்க்கையிலும் அத்தகைய பரிணாம வளர்ச்சியை தனுஷ் அடைந்திருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை.

2002ம் ஆண்டு, ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். ‘புள்ளப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்குது’ என்று ‘மாரி’ படத்தில் டயலாக் பேசுவாரே தனுஷ், அதுபோல, ‘இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா?’ என்று அவர் காதுபடவே பேசினார்கள் பலர். அடுத்தடுத்த படங்களிலும் அந்த பேச்சுகள் தொடர்ந்தன.

ஆனால், எதையும் காதில் வாங்கி கொள்ளாமல், தன் வேலையே கதியென கிடந்தார் தனுஷ். ‘புதுப்பேட்டை’ படம், அவருக்கு திருப்பமாக அமைய, அவர் யாரென நிரூபித்தது. தொடர்ந்து, ‘பொல்லாதவன்’, ‘யாரடி நீ மோகினி’ என தொடர்ந்து ஹிட் கொடுத்தார்.

தற்போது, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என பல நிலைகளை கண்டுள்ளார். அவர் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. தன் வளர்ச்சிக்கு உதவியாக இருந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், குடும்பத்தினர், ரசிகர்களுக்கு, கண் கலங்கியப்படி நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ்.