செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பாண்டிச்சேரியில் உல்லாசம், நயன்தாரா தனுஷ் விவகாரம்.. தனுஷ் அப்பா என்ன சொன்னார் தெரியுமா?

நயன்தாரா தனுஷ் இடையேயான கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தான் இன்று சமூக வலைதளங்களில் பல கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் ஆக சிக்கியுள்ளது. இதை பற்றி, நாட்டிற்கு ரொம்ப முக்கியமான பிரச்சனையை போல பலரும் விவாதித்து வருகின்றனர்.

நயன்தாராவின் விமர்சனங்களுக்கு தனுஷ் பதிலடி கொடுப்பார் என்று பார்த்தால் சத்தமே இல்லாமல் தனது பட வேலைகளை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கிறார். Nayanthara Beyond the Fairy Tale என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நானும் ரௌடி தான் படத்தில் இடம் பெற்றிருந்த BTS வீடியோ மற்றும் பாடல்களை இணைக்க படக்குழு திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், தனுஷ் இதற்கு எதிராக legal notice அனுப்பி, அதற்கு ஈடாக 10 கோடியும் கேட்டிருக்கிறார். இதை தொடர்ந்து நயன்தாரா போட்ட போஸ்ட் படு வைரலாக வலம் வரும் நிலையில், அவர் பயன்படுத்தி இருக்கும் சில வார்த்தைகளை பார்க்கும்போது, இது எதோ இப்போ ஆரம்பித்த பிரச்சனை போல தெரியவில்லை. சொல்லப்போனால், இவர்களுக்குள்ளே, நானும் ரவுடி தான் படம் ஆரம்பித்ததிலிருந்தே பிரச்சனையை வந்திருக்கிறது.

அப்பா என்ன சொன்னார் தெரியுமா?

அதுமட்டுமின்றி, தனுஷ் உத்தமபுத்திரன் பட ஷூட்டிங்கில் இருந்த காலத்தில், நயன்தாராவும் தனுஷும் நெருக்கமான தோழர்களாக இருந்துள்ளனர். அப்போது பாண்டிச்சேரியில், இவர்கள் உல்லாசமாக ஊர் சுற்றியுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இப்படி ஹாப்பியாக சென்று கொண்டிருந்த இவர்கள் நட்ப்பில், குறுக்க இந்த கௌஷிக் வந்தா என்பதை போல நுழைந்தார் விக்னேஷ் சிவன்.

அப்படி நானும் ரவுடி தான் படத்தில் இவர்கள் காதல் மலர்ந்தும், அவர்கள் ஒன்றாக ஊர் சுற்றியது எல்லாம் தனுஷுக்கு கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனால் அவருக்கு நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனுஷ் அப்பா ஒரு சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.

அதில், “இந்த தகவல் எனக்கு தாமதமாக தான் கிடைத்தது. என் மகன் என்னை போல.. பின்னாடி பேசுபவர்கள் பற்றி என்றுமே கவலைப்பட மாட்டார். அவர் தனது பட வேலைகளை மட்டும் தான் கவனித்து வருகிறார். மற்றவர்கள் விவாதிப்பதை கேட்பதற்கு எங்களுக்கு நேரமில்லை. நாங்கள் முன்னோக்கி செல்கிறோம்.

அது மட்டுமின்றி, இவர் NOC சான்றிதழ் வழங்குவதற்காக அவர் 2 வருடம் காத்திருந்ததாக சொல்வதெல்லாம் உண்மை இல்லை. அவரை பற்றி நான் ஏதும் பேச விரும்பவில்லை..” என்று கூறியுள்ளார். இதெல்லாம் பார்க்கும்போது, யார் பக்கம் தவறு சரி என்பதை தாண்டி, யாரும் உத்தமர்கள் இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

Trending News