Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-11

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல சீரியலில் வில்லியாக களமிறங்கிய தனுஷ் பட நடிகை.. இவர் ஒரே பாட்டில் பயங்கர ஃபேமஸ் ஆச்சே!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படம் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சாயாசிங். இவர் அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை விட இப்படத்தில் இடம்பெற்ற மன்மதராசா என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இளைஞர்களின் ஃபேவரைட் பாடலாக இப்பாடல் இருந்தது.

முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து புதிய படங்களில் சாயா சிங் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் எதிர்பார்த்தது போல் தமிழில் பட வாய்ப்புகள் அமையவில்லை. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இது தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் சாயாசிங் நடித்துள்ளார்.

இருப்பினும் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் கடந்த 2011ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நாகம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சமயத்தில் தெய்வமகள் சீரியலில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னரும் ஆனந்தபுரத்து வீடு, இது கதிர்வேலன் காதல், பவர்பாண்டி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் சாயாசிங் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

saaya-singh

saaya-singh

மேலும், இந்த சீரியலில் நடிகை சாயாசிங் வில்லியாக நடிக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியலில் அடுத்தடுத்து நடக்க இருக்கும் காட்சிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபகாலமாக சின்னத்திரைக்கு வரும் முன்னணி நடிகை, நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top