dhanushவிஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் த்ரிஷா.

மேலும், தொடர்ந்து கதாநாயகி என்பதில் இருந்து விடுபட்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் தற்போது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ள திரிஷா, கொடியில் ஒரு அதிரடியான ரோலில் நடித்து ஆக்சன் ஹீரோயினுக்கே உரிய தொனியில் மிடுக்காக நடித்திருக்கிறாராம்.

அதிகம் படித்தவை:  முதலில் சிம்பு, இப்போ திரிஷா- கலக்கும் பிக் பாஸ் பிரபலம். போட்டோ உள்ளே.

அவர் நடந்து வரும் தோரணை, தில்லான பேச்சு ஆகியவற்றைப் பார்த்து அசந்து போன தனுஷே பலமுறை ஸ்பாட்டில் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறார். அந்த அளவுக்கு கொடி படத்தில் இதுவரையில்லாத அளவுக்கு தன்னை முழுசாக மாற்றி மாறுபட்ட பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறாராம் திரிஷா