fbpx
Connect with us

Cinemapettai

புதுப்பேட்டை வெற்றிக்கு பின் தனுஷ் நடித்து பாதியில் நின்ற படம்.. வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புதுப்பேட்டை வெற்றிக்கு பின் தனுஷ் நடித்து பாதியில் நின்ற படம்.. வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ்சினிமாவில் அசுர வளர்ச்சி கண்ட அசுரன் படத்தின் நாயகன் தனுஷ் தனக்கென்று பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

பரியேறும் பெருமாள் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷின் கூட்டணியில் கர்ணன் படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே போகின்றது.

2006ஆம் ஆண்டு தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் நடிப்பில் உருவான புதுப்பேட்டை படம் செல்வராகவன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா தனுஷை வைத்து அடுத்த படம் தயாரிக்க வேண்டும் என்று கதை எழுதி, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது.

அரவிந்த் கிருஷ்ணா குருதிப்புனல், பச்சைக்கிளி முத்துச்சரம் , 7ஜி ரெயின்போ காலனி போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒரு சில காரணங்களுக்காக தனுஷ் இந்த படத்தில் நடிக்கவில்லை. இதனால் ‘திருடன் போலீஸ்’ படம் கைவிடப்பட்டது, இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்தது. தனுஷ் தங்கை இந்த படத்தை தயாரிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த பஸ்ட் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

dhanush

dhanush

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top