Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆங்கிலம் தெரியாமல் அவமானப்பட்ட தனுஷ்.. ஹாலிவுட் பாலிவுட் அளவில் பிரபலமானது எப்படி தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி நடிகர்கள் ஆரம்ப காலத்தில் ஆங்கிலம் தெரியாமல் அவமானப்பட்டது நிறைய உண்டாம். விஜய் சேதுபதி, யோகிபாபு, இவர்கள் வரிசையில் தனுஷும் உண்டு.

பல நெருக்கடியில் தனது முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்கிறார் தனுஷ், அந்தப் படத்தில் நடிக்கும் போது பல அவமானங்களை சந்திக்கிறார் ஒல்லிபிச்சான் என்று காதுபட கூறும்போது தான் ஒரு செவிடன் ஆகிவிடுவேன் என்று ஒரு பேட்டியில் கூறி இருப்பர்.

அதுமட்டுமில்லாமல் படம் வெற்றி கண்டவுடன் பிரஸ்மீட்டில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் எப்படி பதில் கூறுவது என்ற பயம் அவருக்கு அதிகமாக உண்டாம். இதனால் மேடைகளில் அவமானங்களை சந்தித்து, ஓடி ஒளிந்து கொள்வாராம்.

தனுஷ் இது போன்ற அவமானங்களை எப்படி போக்குவது என்று முயற்சி செய்ய தொடங்கினர், அப்போது தான் பிரண்ட்ஸ் என்ற ஆங்கில சீரிஸ் பார்க்க தொடங்கினார், அதற்கு பின்னர் ஆங்கில நாவல்களை படிக்க தொடங்கினார்.

‘Da Vince Code’ என்ற நாவல் அவரை மிகவும் கவர்ந்துள்ளது, படிக்கப்படிக்க புரிய ஆரம்பித்தது, ஆங்கிலம் பேச தொடங்கினார். முதலில் தவறாக பேசினார் தன்னைத் திருத்திக் கொண்டார். இப்படி பல முயற்சிகள் எடுத்து தான் தற்போது தமிழ் சினிமாவில் இருந்து, ஒரு சிறந்த நடிகனாக பாலிவுட், ஹாலிவுட் அளவில் உயர்ந்துள்ளார்.

இது ஒரு புறம் இருந்தாலும் சினிமாவில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு, உலகளவில் நிறுத்திக் கொண்டுள்ளது, அதாவது சினிமாவில் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டால் அதுவாகவே மாறி விடுவார். அதற்கு வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளிவந்த படங்களை உதாரணம், இயக்குனர் கைவண்ணம் இருந்தாலும் ஒரு நடிகனின் முழு முயற்சி திறமை அவரை வழிநடத்தி செல்கிறது.

பாரதிராஜா ஒரு பேட்டியில் தனுஷின் அசுரன் படத்தில் வந்த வயதான கதாபாத்திரத்தில்(சிவசாமி) நான் நடித்து இருக்கலாமே என்று ஏங்கியது உண்டாம். அந்த அளவுக்கு கதாபாத்திரமாக வாழ்ந்து இருப்பார். பல அவமானங்களை சந்தித்து தான் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.

முயற்சிகள் வீணாக போவதில்லை தோல்விகள் துரத்தினாலும் முயற்சி செய்து கொண்டே இருந்தாள், உங்கள் இலக்கை எளிதாக அடைந்து விடலாம்.

Continue Reading
To Top