தனுஷின் புதுப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கட்டிபுடிப் புகழ் டிடி என்கிற தேவதர்ஷினி. யார் யாரோ நடிக்க கூப்பிட்டும் தண்ணி காட்டினார் டிடி.

அட, உலகநாயகன் கமல் முத்தம் கொடுத்து கூப்பிட்டுப்பார்த்தார். டிடி கருணை காட்டவே இல்லை. வெறுத்துப் போன கமல் ஒதுங்கிக் கொண்டார்.

ஆனால், தனுஷ் தனது படத்திற்கு ஒரு தேவதைவேண்டும். அந்த தேவதை உலகில் எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை.

ஆனால், ஒரு டிவியில் இருக்கிறார். அது நீதான் என்று கூற அசந்து போன டிடி மறு பேச்சு பேசாமல் ஒத்துக் கொண்டார்.

புதுக் கணவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் கொஞ்சமும் இஷ்டமில்லை. ஆனால், தனுஷ் கூட டூயட் பாட பறந்துவிட்டார் டிடி.

அதிலிருந்து டிடி புராணம் பாடிக்கொண்டு இருந்தார் தனுஷ். அண்மையில் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் டிடியை புகழ்ந்து தள்ள கிளிக்கு ஒரே வெட்கம்.

வீட்டிலோ மோட்டுவலையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருகிறார்கள்.

தனுஷ் காட்டில மழை..டிடி வீட்டில் இடி.