திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

அடடே.. நம்ம தனுஷ் அப்பாவா இது.. ஆள் அடையாளமே தெரியலையே

சமீபத்தில், மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘ஹபீபி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  ‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் இப்போது புதுமுகங்கள் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார்.

இஸ்லாமிய குடும்ப பின்னணியில் ஒரு படத்தை தற்போது உருவாக்கியுள்ளார்.  இந்த நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவனின் தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  ஆனால் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி உள்ளார். 

என்ன இப்படி ஆகிட்டாரு

ஹபீபி படத்தில் பாய் ஆக நடித்திருக்கும் கஸ்தூரி ராஜாவை கண்டுபிடிக்கவே அரை மணி நேரம் ஆகிவிட்டது.  ஆம். அவர் உடல் எடையை பயங்கரமாக குறைத்துள்ளார். ஆரம்ப காலங்களில் நல்ல நல்ல படைப்புகளை கொடுத்த இவர் பிள்ளைகள் வளர்ந்து ஓர் நிலைக்கு வந்த பிறகு சற்று சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருந்தார். 

இந்த நிலையில் பிள்ளைகள் எல்லாம் ஒரு பக்கம் சினிமாவை பட்டையை கிளப்ப, மெதுவாக எட்டி பார்க்கிறார் கஸ்தூரி ராஜா. இந்த படத்தில் இவரை பார்த்தவுடன் கண்டே பிடிக்க முடியவில்லை.  இவருக்கு நன்றாகவே அந்த முதுமை வந்துவிட்டதே என்று ஆச்சரிய பட்டு வருகினறனர். 

இந்த நிலையில், இந்த படம் பற்றி இயக்குனர் மீரா கூறியதாவது, “இது என் கனவு படம். இது போன்ற படம்தான் என் முதல் படமாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் திரைத்துறைக்கு வந்தேன். இதைச் சாத்தியப்படுத்த 20-வருடமாகி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News