Connect with us

Cinemapettai

மிரட்டலான கூட்டணியில் தனுஷின் அடுத்த பட பூஜை.. மலைபோல் நம்பி உள்ள இயக்குனர்

dhanush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மிரட்டலான கூட்டணியில் தனுஷின் அடுத்த பட பூஜை.. மலைபோல் நம்பி உள்ள இயக்குனர்

தனது நடிப்பு திறமையால் ஹாலிவுட் வரை புகழ் பெற்றவர் தனுஷ். இவரின் 43 வது படத்தை கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் படக்குழு பூஜை போட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைத்தாண்டி அடுக்கடுக்காக பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush malavika mohanan

dhanush malavika mohanan

இந்த படத்தைப் பொருத்தவரை மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகன் தனுஷுடன் முதல்முறையாக இணைகிறார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் நடிப்பைத் தாண்டி இசையில் கொடிகட்டி பறக்கும் ஜிவி பிரகாஷுக்கு தனுஷுடன் ஐந்தாவது முறையாக இணைகிறார் என்பது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான்.

dhanush d 43

dhanush d 43

இதைத்தாண்டி மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த ஸ்மிருதி மற்றும் சமுத்திரகனி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஏற்கனவே கார்த்திக் நரேன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் வெளிவந்த மாஃபியா படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

இதனால் கார்த்திக் நரேன் தனுஷின் 43வது படத்தை மலைபோல் நம்பி உள்ளார். அதுமட்டுமில்லாமல் இடையில் தனுசு கார்த்திக் நரேனை தட்டிக் களித்ததாகவும் பின்னர் கதைகளை இன்னும் சுவாரசிய படுத்தி தனுசை கவர்ந்துள்ளார் கார்த்திக் நரேன். முதல் முறையாக இவர்கள் இணையும் இந்த கூட்டணிக்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

d43-karthick-naren-twit

d43-karthick-naren-twit

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top