Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷை அழ வைத்த பாலிவுட்.. எதற்காக தெரியுமா?

நடிகர் தனுஷ் சமீபத்தில் பார்த்த ஒரு பாலிவுட் படம் அவரை அழ வைத்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். பாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய் தத். இவர் அடைந்த புகழுக்கு ஏற்ப சர்ச்சைகளையும் சந்தித்து இருக்கிறார். இதை தொடர்ந்து அவரின் வாழ்க்கை பாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. சஞ்சு எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராஜ்குமார் இரானி இயக்குகிறார். ரன்வீர் கபூர் நாயகனாக நடிக்கிறார். அவரது தாய் நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலாவும் நடித்துள்ளனர்.
படத்தில் சஞ்சய் தத்தின் சிறுவயது, அவரின் வளர்ச்சி, சிறை சென்றது என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்னர் இந்திய சினிமா உருவாக்கிய எல்லா பயோபிக் படங்களிலும் வெற்றி நாயகனை பற்றியே பேசியது. ஆனால், சஞ்சு படத்தில் சஞ்சய் தத்தையும் சூழ்நிலைக் கைதி எனக் காட்ட முயற்சி செய்தாலும், தப்பு அவர் மீது என்பதை படம் சமரசமின்றி காட்சிப்படுத்துகிறது.
இந்நிலையில், இப்படத்தை பார்த்த தனுஷ் தனது வாழ்த்துக்களுடன் படம் தனக்கு கண்ணீரையும் தந்ததாக தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சஞ்சு – என்ன நான் சொல்லுவேன். எப்படி ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு படத்தை எடுக்கின்றீர்கள் ராஜ் குமார் இரானி சார். சிறப்பு.. சிரித்தேன்.. அழுதேன்.. ரன்பீர் நீங்கள் கலக்கி விட்டீர்கள், இரானி சார் மற்றொரு முறை உங்கள் படத்தை பார்த்து மகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீருடன் தியேட்டரில் இருந்து வெளியேறினேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
