நம் கோலிவுட்டில் பன்முகக்கலைஞ்ன யார் என்றால் அது தனுஷ் தான். நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று சினிமாவில் பல துறைகளில் கலக்கி வருபவர். தன் படம் மட்டும் அல்லாது, சக நடிகரின் படங்கள் நன்றாக இருந்தால், அதை வெளிப்படையாக சொல்லும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

ரிலீசுக்கு முன்பே தன் ட்விட்டரில், மேயாத மான் படத்துக்காக கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு ஆல் தி பெஸ்ட் சொன்னார்.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரேஷன்ஸ் சார்பில் ரத்தின குமார் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் முதல் படம் இது. வைபவ், விவேக் பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் இதன் இசையமைப்பாளர்கள்.

அதிகம் படித்தவை:  வெளியானது நாடோடிகள் 2 படத்தின் ஜஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோ 02 !
Priya Bhavani Shankar @ Meyatha Maan Audio Release at Loyola College Photos

மெர்சல் படத்துடன் ரிலீஸ் ஆனா இப்படம் மெர்சல் பிவேர் சற்று ஓய்ந்ததும் இப்பொழுது பிக் அப் ஆகியுள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவை தனுஷ் பாராட்டியது இவர்களுக்கு நல்ல விளம்பரமாக அமைந்து விட்டது .
தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் ‘ரொம்ப நாள் கழித்து நான் நன்றாக சிரித்து மகிழிந்தேன். நட்பு, ஒரு தலை காதல், நண்பனின் தங்கச்சி .. சில விஷயங்கள் எப்பவுமே ஜெயிக்கும்’ என்றார்.

மேலும் தயாரிப்பாளர், நடிகர்கள், இசையமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்:

அதிகம் படித்தவை:  பத்மாவத் படத்தில் மாற்றியமைக்கப்பட்ட "கும்ஹார்" வீடியோ பாடல் !

நம்ம சீரியல் புகழ் பிரியா பவானி ஷங்கர் பற்றி, ஏன் எதுவும் ஸ்பெஷலாக சொல்லவில்லை. என்ன காரணமா இருக்கும் ?
சும்மா கொளுத்தி போடுவோம்