Connect with us

Cinemapettai

வடசென்னை பார்ட் 2 பற்றி ஸ்டேட்டஸ் தட்டிய தனுஷ்.

Cinema News | சினிமா செய்திகள்

வடசென்னை பார்ட் 2 பற்றி ஸ்டேட்டஸ் தட்டிய தனுஷ்.

பொல்லாதவன், ஆடுகளம் தொடர்ந்து மீண்டும் வடசென்னை படத்திற்காக இணைந்தனர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன். மல்டி ஸ்டார்கள் கொண்ட காங்ஸ்டர் ட்ராமா படம். மூன்று பகுதிகளாக வெளியாகும் என்பதனை ஷூட்டிங் துவங்கும் முன்பே அறிவித்தனர்.

அன்புவாக தனுஷ், சந்திரவாக ஆண்ட்ரியா, ராஜனாக அமீர், பத்மாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் என பல பவர்புல் கதாபாத்திரங்கள் உண்டு இப்படத்தில். அன்புவின் எழுச்சி தான் இரண்டாம் பாகம் என்பதுடன் முதல் பார்ட் முடிந்தது.

தற்பொழுது தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் “அசுரன்” ரெடியாகி வருகின்றது. அதுமட்டுமன்றி தனுஷ் சத்யா ஜோதி பானேரில் அடுத்தடுத்து நடிக்கிறார். மேலும் அடுத்து வெற்றிமாறன் “வெப் சீரிஸ்” எடுக்கப்போகிறார் என்ற தகவலும் கிசு கிசுக்கப்படுகிறது. வடசென்னை படத்தில் வரும் அமீர் கேரக்டரை சிறுவயதிலிருந்தே எடுக்கப் போவதாகவும் சொல்கின்றனர் கோலிவுட் பட்சிகள். இந்நிலையில் வடசென்னை பாகம் 2 ட்ராப் என்ற தகவல் சில தினங்களாக பரவி வருகின்றது. வடசென்னை மக்களின் எதிர்ப்பும், முதல் பார்ட்க்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனம் தான் கரணம் என சில யூ ட்யூப் சானல்கள் செய்திகளும் போட துவங்கியது.

இந்நிலையில் எதனால் ரசிகர்களிடம் இந்த தீடீர் குழப்பம் என தெரியவில்லை. வட சென்னை 2 கட்டாயம் தொடங்கப்படும். எனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தகவல்கள் வரும். அவ்வாறு வெளியாகாத வரை யாரும் பிற வதந்திகளை நம்பவேண்டாம். உங்கள் அன்புக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

ஒரு வேலை லேட் ஆனால் ஆகலாம், ஆனால் பார்ட் 2 கட்டாயம் என உறுதி செய்துவிட்டார் தனுஷ்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top