புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இளையராஜா ஃபயோபிக்காக கேரக்டராகவே மாறிய தனுஷ்.. நயன் பத்த வெச்ச நெருப்பு

Dhanush: கடந்த இரு நாட்களாக கங்குவா படத்தை எல்லா பக்கம் இருந்தும் கழுவி ஊற்றி வந்தனர். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம தீனி என்னும் கதையாக படம் ட்ரோல் செய்யப்பட்டு வந்தது. தற்போது அதை ஓரம் தள்ளி தனுஷ், நயன்தாரா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் நயன்தாராவின் டாக்குமென்டரி படத்தில் நானும் ரவுடிதான் பட க்ளிப்பிங் இடம்பெற தனுஷ் அனுமதிக்கவில்லை. இரண்டு ஆண்டு காலமாக காத்திருந்தும் பலனளிக்கவில்லை.

தற்போது ட்ரெய்லரில் சில வினாடி காட்சிகள் இடம் பெற்று இருப்பதை பார்த்த தனுஷ் தரப்பிலிருந்து 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். இதை நயன்தாரா மூன்று பக்க அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

இளையராஜாவாக மாறிய தனுஷ்

என்னடா கன்டென்ட் கிடைக்கும் என பார்த்துக் கொண்டிருந்த நெட்டிசன்களுக்கு இது லட்டு மாதிரி கிடைத்துள்ளது. தற்போது இரு தரப்புக்கும் ஆதரவு எதிர்ப்பு இரண்டும் ஒருசேர வந்து கொண்டிருக்கிறது.

அதில் தனுஷ் இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்க இருப்பது அனைவரும் அறிந்தது தான். இது குறித்த அறிவிப்பு வெளிவந்த நிலையில் இந்த விவகாரத்தோடு அதையும் சேர்த்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதாவது இளையராஜாவாக மாறுவதற்காக தனுஷ் பயிற்சி எடுத்து வருகிறார். அதனால் தான் அவர் பாணியில் பணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். கேரக்டராகவே மாறிய தனுஷ் என கிண்டலடித்து வருகின்றனர்.

ஏனென்றால் இளையராஜா தன்னுடைய பாடல்களை யாராவது பயன்படுத்தினால் உடனே நோட்டீஸ் அனுப்பி நஷ்ட ஈடு கேட்டு விடுவார். இது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் தனுஷையும் இதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News