Connect with us
boomerang-movie

தனுஷை உரிமை கொண்டாடிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Dhanush_HighCourt

News | செய்திகள்

தனுஷை உரிமை கொண்டாடிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தங்களுடைய மகன் என்று கூறி மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் தங்களுக்கு பராமரிப்பு செலவிற்காக மாதம் பணம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். இதை எதிர்த்து நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக தனுஷ் நேரில் ஆஜராகும்படி கோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து தனுஷூக்கு அங்க அடையாளங்கள் உள்ளிட்டவைகள் மருத்துவரின் உதவியோடு சரிபார்க்கப்பட்டன. அதில் தனுஷ், தனது அங்க அடையாளங்களை நவீன சிகிச்சை மூலம் அழித்துவிட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து இரு தரப்பு வாதங்களும் கோர்ட்டில் நடைபெற்றன. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். பின்னர் தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top