Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அண்ணன் மகனுடன் கொஞ்சி விளையாடும் தனுஷ்.. காட்டுத் தீயாய் பரவும் கியூட்டான புகைப்படம்

கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை தனது திறமையை நிரூபித்துக் காட்டிய ஒரே தமிழ் நடிகர் என்றால் அது நடிகர் தனுஷ் மட்டுமே. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றன. அதேபோல் தனுஷின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இவரது படங்கள் அனைத்துமே விருதுகளையும் குவித்து வருகின்றன. தற்போது நடிகர் தனுஷின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷும், இயக்குனர் செல்வராகவனும் சகோதரர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர்கள் இருவரது கூட்டணியில் உருவான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல் இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் அவரது அண்ணனும், இயக்குனருமாகிய செல்வராகவனின் குழந்தையை கையில் வைத்து கொஞ்சுவது போன்ற புகைப்படம் ஒன்றை இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த தனுஷ் ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகின்றனர். பதிவிட்ட சிலமணி நேரங்களிலேயே அதிக லைக்குகளை குவித்துள்ளது.

மேலும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள கீதாஞ்சலி அதற்கு கேப்ஷனாக, “சித்தப்பா நான் கிங் மற்றும் காங் உடன் விளையாடலாமா?” என அந்த குழந்தை நடிகர் தனுஷ் இடம் கேட்பது போல் பதிவிட்டுள்ளார். நடிகர் தனுஷ் சமீபத்தில் அவரது வீட்டிற்கு கிங் மற்றும் கான் என பெயரிடப்பட்ட இரண்டு நாய்க் குட்டிகளை வாங்கி வந்திருந்தார். அதனை குறிக்கும் விதமாக கீதாஞ்சலி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் மிகவும் அழகாக உள்ளது என கமெண்ட் செய்துள்ளார்.

dhanush-selva-son

dhanush-selva-son

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல். இப்படத்தின் பிசியான பணிகளுக்கு இடையே தனுஷ் தனது அண்ணன் மகனை கொஞ்சியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top