Dhanush-Birthmarks-Issue

தனுஷ்க்கு சினிமா வட்டாரத்தில் இருக்கும் சர்ச்சை போதாதென்று தனிப்பட்ட வாழ்க்கையிலும் சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

தங்கள் மகன்தான் தனுஷ் என்று பல வருடங்களாக மதுரை மேலூரைச்சேர்ந்த தம்பதி போராடி வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து மருத்துவ சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இவரின் உடலின் முக்கிய அடையாளங்கள் லேசர் மூலம் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் தற்போது தனுஷ் தரப்பு வழக்கறிஞர் சுவாமிநாதன் கூறுகையில், இந்த மருத்துவ அறிக்கை நீதிமன்றத்துக்கு பதிலளிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் அவரின் உடலில் எதிர்தரப்பினர் சொன்ன எந்த அடையாளமும் இல்லை. லேசரின் மூலம் அழிக்க முடியுமா என்ற நீதிபதிகளின் கேள்விக்கு முடியும் என்று சொன்ன பதிலை தவறாக புரிந்து கொண்டு தனுஷ்க்கு லேசர் மூலம் அழிக்கப்பட்டதாக பொய் பிரச்சாரம் செய்துள்ளனர் என்றார்.