fbpx
Connect with us

விட்ட பெரிய தலைவலி! இனிமேவாது தனுஷை விடுவார்களா?

dhanush tension

News | செய்திகள்

விட்ட பெரிய தலைவலி! இனிமேவாது தனுஷை விடுவார்களா?

ஒருவர் புகழின் உச்சத்தை தொட்டால் அதை சமாளிப்பது ஒரு பெரிய வேலை. அவருக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வருவது சாதாரணம். அந்த இடத்தில் இருந்தது வேற யாரும் இல்ல நம்ம தனுஷ்தான். அவர் ரஜினி மகளை கல்யாணம் பண்ணாலும் பண்ணார். அவர் புகளின் உச்சத்தை தொட்டார். அமிதாப் கூடவும் நடித்தார். ஹிந்தியிலும் பெரிய வெற்றி படத்தை தொட்டார் கூடவே சுசி லீக்ஸ், தனுஷ் என் மகன் என ஒருவர் வைத்த கேஸ் என கோர்ட் கோர்ட்டாக அலைய விட்டார்கள்.

இப்பவும் தனுஷ் ஓகே சொன்னால் ஹிந்தியில் படம் எடுக்க பல பேர் இருக்கிறார்கள், எல்லாம் தனுஷ் கையில்தான். ஆனால் இந்த பிரச்சனைலாம் முடியட்டும் என்றுதான் அவரும் இருந்தார். சுசி லீக்ஸ் வந்தோன ரஜினியால் கூட ஒன்றும் பேச முடியவில்லை. ஆனால் உலகம் அதெல்லாம் எப்பவோ மறந்துவிடும். அதெல்லாம் நம்ம மக்களோட பழக்கம், அப்படி பழக்கி வைத்து இருக்கிறார்கள் நம்ம அரசியல்வாதிகள். வேலை இல்லாத பட்டதாரி 2 வந்த நேரத்தில் தனுஷிடம் சுசி லீக்ஸ் பத்தி ஒருவர் எடுத்த பேட்டியில் அவர் கடுப்பாகி திட்டி கிளம்பிட்டார். அந்த வீடியோ கீழே இருக்கு.

சரி சுசி லீக்ஸ் ஒருவழியா விட்டாசின்னு நினைச்சிட்டு இருக்கும்போது, காணாமல் போன என் மகன்தான் தனுஷ் என புது புரளியை கிளப்பி கொண்டு இருந்தார் மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி, அதுவும் கோர்ட்டில் கேஸ் போடற அளவு சென்று விட்டார். அந்த கேசும் பல வருடம் சென்றது. தனுஷ், படங்களில் கவனம் செலுத்த முடியாத அளவு சென்று கொண்டு இருந்தது. தயவு செஞ்சி இந்த கேஸ் நிப்பாடுங்க என்று தனுஷ் முறையிட்டு கொண்டே இருந்தார். பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தனுஷுக்கு மதுரைக் கிளை உத்தரவிட்டது. தனுஷ் மற்றும் கஸ்துரி ராஜா அனைத்து ஆவணங்களை கொடுத்துவிட்டனர். இதை ஏற்று கொண்டு கதிரேசன் – மீனாட்சி தம்பதி நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க தடை விதித்து மதுரைக் கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்.

தலைவலி விட்டுச்சே என நினைக்கும்போது கதிரேசன் – மீனாட்சி தம்பதி தனுஷ் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் கார்டு என அனைத்தும் போலியானவை திரும்பவும் மதுரை கிளையில் ஒரு கேஸ் போட்டது. ஆனால் மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எற்றுகொள்ளப்டமாட்டது எனக்கூறி அம்மனுவை ரத்து செய்து நீதிபதி இன்று உத்தரவிட்டார். ஒரு ஏழை குடும்பத்தால் ஒரு பெரிய இடத்தில் இருக்கும் ஒருவர் குடும்பம் மீது எப்படி இவளோ தைரியமா கேஸ் போட்டு இழுத்தடிக்க முடியும். இதற்கு பின்னால் யாரும் இருகிறார்களா? என்பது கேள்விக்குறியே..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top