மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசனும், அவரது மனைவி மீனாட்சியும் பிரபல நடிகர் தனுஷ் எங்களுடைய மகன். அவனது இயற்பெயர் கலைச் செல்வன். அவனை சினிமாவில் நடிக்க வைத்த கஸ்தூரிராஜா தனது மகனாக ஆக்கிக் கொண்டார். தனுஷ் எங்களுக்கு வாழ்க்கை செலவாக மாதம் 65 ஆயிரம் தர வேண்டும் என்று மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் தனுஷ் தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தனுஷ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். இதனால் வழக்கு விசாரணையை வருகிற மார்ச் மாதம் 3ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது நீதிமன்றம். தனுஷ் கஸ்தூரிராஜாவின் மகன் என்பது உறுதியானது என்றாலும் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.