பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்குப்பிறகு தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி அமைத்துள்ள படம் வடசென்னை.இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் தனுசுடன் விஜயசேதுபதி, சமுத்திரகனி, கிஷோர், அமலாபால், ஆண்ட்ரியா, கருணாகரன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.

தற்போது வடசென்னை படப்பிடிப்பு சூடுபிடித்துள்ள நிலையில், முதல்கட்டமாக தனுஷ் ஜெயிலுக்குள் கைதியாக இருக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் வெற்றிமாறன்.

வடசென்னை தமிழ் பேசியபடி அவர் கலாட்டா செய்வதும், பின்னர் ஜெயிலர் வந்து அவரை கண்டிப்பது போன்ற காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு படமாக்கப்பட்டிருக்கிறது. தனுஷ் என்ன தவறு செய்து விட்டு ஜெயிலுக்குள் சென்றார் என்பது போன்ற விசயங்கள் அடுத்தகட்டமாக படமாக்கப்பட உள்ளதாம்