வளர்த்துவிட்ட வரை பிரித்து விட்ட சிவகார்த்திகேயன்.. தனுஷ், அனிருத் பிரிவுக்கு இதுதான் காரணம்

தனுஷ் பொருத்தவரை எப்போதுமே எல்லோருக்கும் உதவி செய்யும் எண்ணம் உள்ளவர். கிட்டத்தட்ட தனுஷ் சின்னத்திரையில் இருந்த பிரபலங்களை தனது படங்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பல நடிகர்களுக்கும் தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

தனுஷ் 3 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிவகார்த்திகேயன் இப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் ஓரளவிற்கு பிரபலமானார். ஆனால் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா படத்தை விட 3 படம் தான் இவருக்கு சினிமாவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் வைத்து தனுஷ் எதிர்நீச்சல் மற்றும் காக்கி சட்டை போன்ற படங்களை தயாரித்து சினிமாவில் சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டார். மேலும் தனுஷ் சினிமாவில் உச்சத்தில் இருந்தும் எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

அந்த அளவிற்கு சிவகார்த்திகேயனின் சினிமா வளர்ச்சியில் தனுஷ் பெரிய அளவு பங்காற்றினார். அதனை சிவகார்த்திகேயன் முதலில் ஒப்புக்கொண்டு தனுஷிற்கு உண்மையாக இருந்தார். ஆனால் சினிமாவில் வெற்றி பெற்ற பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய திறமையை தான் வெற்றிக்கு காரணம் என்பது போல் நடந்து கொள்ள ஆரம்பித்தார். தனுஷ் அறிமுகப்படுத்தி வைத்த அனிருத்தும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து நெருங்கிய நண்பர்கள் ஆயினர்.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் படங்களுக்கு அனிருத் பெரிய அளவில் தனது இசையில் உதவினார். அதேபோல் தனுஷ் படங்களுக்கும் அனிருத் இசையமைத்து வந்தார். ஆனால் தனுஷ் படங்களுக்கு அனிருத் ஆர்வமாக இசையமைத்தது விட சிவகார்த்திகேயன் படங்கள் தான் அதிகம் ஆர்வமாக இசையமைத்தார்.

இதனால் மனம் வருந்திய தனுஷ் இதன் பிறகு தன்னுடைய படங்களுக்கு மற்ற இசையமைப்பாளர்கள் போட வேண்டும் எனக்கூறி அனிருத்திற்கு ஒரு சில வருடங்கள் இசையமைக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான் என பலரும் கூறுகின்றனர்.

இது அவர் நட்பை பிரித்து விட்டது என்று கூறினாலும் ஒருவிதமான ஈகோ பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. தான் வளர்த்துவிட்ட பிரபலம் தற்போது தன்னையே மீறி செல்வது என்பது போன்ற கோவம் தற்போது வரை உள்ளது. ஆனாலும் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் நட்பு தற்போது வரை தொடர்ந்து தான் வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்