அனிருத் இசையமைப்பாளர் ஆனது தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம்தான். அந்தப்படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வெற்றி அனிருத்துக்குப் பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.

அதன்பின் தனுஷூம் அனிருத்தும் நகமும் சதையும் போல இருந்தனர். அந்த உறவில் பிரிவு ஏற்பட்டுவிட்டதெனச் சொல்லப்பட்டது. தனுஷ் தயாரிப்பில் உருவான நானும்ரவுடிதான் படத்தின் பின்னணிஇசைச் சேர்ப்பு நடந்த நேரத்திலேயே இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது என்கிற பேச்சு இருந்தது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக தனுஷின் கொடி படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டிருந்த அனிருத் அப்படத்திலிருந்து விலகினார். அதனால் அந்தப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார்.

அதிகம் படித்தவை:  ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ் - ரசிகர்கள் உற்சாகம்

தொழில்ரீதியாகப் பிரிந்திருந்தாலும் உறவினர்கள் என்கிற அடிப்படையில் அவர்கள் சேர்ந்தே இருப்பார்கள் என்று சொல்லப்பட்டது. அதிலும் சிக்கல்தான் போலிருக்கிறது.

அண்மையில் அனிருத் இசையமைப்பில் புதுநடிகர் ரிஷிகேஷ் நடிப்பில் ரம் என்கிற படம் தயாராகிறது என்கிற அறிவிப்பு வந்தது. அந்தப்புதுநடிகர் அனிருத்தின் நெருங்கிய உறவினர். அவர் நடிக்கும் ரம் படத்தின் அறிவிப்பு வந்தவுடன் அதைப் பாராட்டி டிவிட் போட்டிருந்தார் தனுஷ். அதில் நாயகன் ரிஷிகேஷை மட்டும் குறிப்பிட்டு வாழ்த்தியிருக்கிறார்.

அதிகம் படித்தவை:  கோவை போலீஸ் முன் ஆஜரான அனிருத்!

அந்தப்படத்துக்கே மையம் என்று கருதப்படும் அனிருத் பற்றி எதுவும் சொல்லவில்லை. அந்த வாழ்த்து டிவிட்டரில் அனிருத்தைச் சேர்க்கவும் இல்லை. இதனால் சாதாரணமாகப் பேசிக்கொள்ள முடியாத அளவு அவர்களுக்குள் கசப்பு ஏற்பட்டுவிட்டது என்று திரையுலகில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.