fbpx
Connect with us

Cinemapettai

தனுசை கடுப்பேற்றிய பிரபல இயக்குனர்.. போயா என வேற ஆளை மாற்றிய இளைய சூப்பர் ஸ்டார்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுசை கடுப்பேற்றிய பிரபல இயக்குனர்.. போயா என வேற ஆளை மாற்றிய இளைய சூப்பர் ஸ்டார்!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் தனுஷ். அவ்வப்போது கமர்ஷியல் படங்கள் அவரது காலை வாரி விட்டாலும் வெற்றிமாறனுடன் சேர்ந்து ஒரு ஹிட் படத்தை கொடுத்து விடுவார்.

அப்படித்தான் அசுரன் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அவர்களது கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளது. இது ஒருபுறமிருக்க கர்ணன், ஜகமே தந்திரம் என அடுத்தடுத்த படங்கள் வரிசையாக காத்துக்கொண்டிருக்கின்றன.

இதன் பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருந்தார் தனுஷ். அந்த படத்திற்காக முதலில் தேர்வு செய்யப்பட்ட இயக்குனர் ராட்சசன், முண்டாசுபட்டி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ராம்குமார் தான்.

அந்த அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடங்களாகியும் இன்னமும் கதையை தயார் செய்யாமல் தனுசுக்கு டிமிக்கி கொடுத்து வந்துள்ளார் ராம்குமார். இதனால் டென்ஷனான தனுஷ் உடனடியாக இயக்குனரை மாற்றி விட்டாராம்.

துருவங்கள் பதினாறு என்ற வெற்றி படத்தை கொடுத்த கார்த்திக் நரேனுடன் கைகோர்த்துள்ளாராம். ராம்குமார் படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் படத்தில் நடிக்க இருந்த தனுஷ் ராம்குமாரை ஒதுக்கிவிட்டு கார்த்திக் நரேனுடன் திடீரென கைகோர்த்து விட்டாராம்.

இதனால் மிகவும் வருத்தத்தில் உள்ளார் ராம்குமார். இருந்தாலும் எப்போது கதையை ரெடி செய்தாலும் தனுஷ் நடிக்க தயார் என கூறி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

கார்த்திக் நரேன் படத்தில் நடிகர் தனுஷ் கொஞ்சம் பயப்படுவதாகவும் அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வந்த மாபியா படம் தனுசை மிகவும் யோசிக்க வைத்துள்ளது.

Continue Reading
To Top