Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீங்க செஞ்சது நம்பிக்கை துரோகம், எப்படி மன்னிப்பது.. தயாரிப்பாளரை தள்ளி வைத்த தனுஷ்

தனுஷ்(Dhanush) மிகவும் நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் ஒருவர் அவரை ஏமாற்றியதால் இனிமேல் அவருடைய பெயரைக்கூட காதில் கேட்க விரும்புவதில்லை என கடுப்பில் உள்ளாராம்.

தனுஷ் படங்களை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் ரெடியாக இருக்கின்றனர். அதற்கு காரணம் சமீப காலமாக தனுஷ் தேர்வு செய்யவும் கதைகள் அனைத்துமே வித்தியாசமாகவும் அதே நேரத்தில் வசூல் செய்யும் விதமாகவும் அமைந்து வருகின்றது.

கடைசியாக வெளியான அசுரன், கர்ணன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்தது. அதே வரிசையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வசூலில் தாறுமாறாக வெற்றி பெறும் என தனுஷ் நம்பிய திரைப்படம்தான் ஜகமே தந்திரம்.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் முதன்முதலாக உருவான ஜகமே தந்திரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. அதனைத் தொடர்ந்து வெளியான தீம் மியூசிக், ரகிட ரகிட போன்றவை படத்தை எப்போது பார்ப்போம் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் தூண்டியது.

திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானால் கண்டிப்பாக ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என்ற கனவில் இருந்த தனுஷ் தலையில் கல்லை தூக்கிப் போட்டு விட்டார் தயாரிப்பாளர் ஒய் நாட் சசிகாந்த்.

இதனால் கடுப்பான தனுஷ் தற்போது வரை ஜகமே தந்திரம் படத்தின் எந்த ஒரு புரோமோஷன் நிகழ்ச்சிகளையும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொள்வதே இல்லை. தயாரிப்பாளர் நம்ப வைத்து கழுத்தறுத்ததால் தனுஷ் அவர் மீது செம அப்செட்டில் இருக்கிறாராம். ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

jagamethandhiram-cinemapettai

jagamethandhiram-cinemapettai

Continue Reading
To Top