உலகின் டாப் படங்கள் பட்டியலில் இடம் பிடித்த தனுஷ் மற்றும் யோகி பாபு படங்கள்

Letterboxd என்ற இணையதளம் 2021 ஜுன் 30 வரை உள்ள அரையாண்டில் உலகில் வெளியான சிறந்த 25 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. திரையரங்கு, ஓடிடி அல்லது வீடியோ ஆன் டிமாண்ட் என ஏதாவது ஒன்றில் படம் வெளியாகியிருக்க வேண்டும், என்ற ஒன்று மட்டுமே நிபந்தனை.

உலகளாவிய பட்டியலான இதில் இந்தியாவைச் சேர்ந்த 5 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் மூன்று மலையாள படங்களும், இரண்டு தமிழ் படங்களும் இடம் பெற்றள்ளன.

இந்த பட்டியலில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் 10வது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் வலியையும், அவர்கள் திருப்பி அடிப்பதையும் கூறி இருந்தது. திரையரங்கில் வெளியாகி வசூலை அள்ளியதோடு, ஓடிடியிலும் அதிக பார்வையாளர்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

karnan-dhanush-cinemapettai
karnan-dhanush-cinemapettai

அதேபோல் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் இந்தப் பட்டியலில் 17வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் படம் ஒரு சாமானியனின் வாக்குக்குக்கு இருக்கும் வலிமையை அரசியல் நையாண்டியுடன் கூறி இருந்தது. அரசியல் சட்டையர் என்ற வகையில் பலரது பாராட்டை பெற்ற படம்.

இதேபோல் மலையாள படங்களான தி கிரேட் இன்டியன் கிச்சன் படம் 5வது இடத்திலும், ஜோஜி படம் 12வது இடத்திலும்,
நாயாட்டு படம் 23வது இடத்திலும் உள்ளது.

mandela
mandela

சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட சிறந்த 25 படங்களின் பட்டியலில் 5 இந்திய திரைப்படங்கள் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். அதிலும் இரண்டு தமிழ்ப் படங்கள் என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய தருணம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்