இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகின்றது.

இதில் மூன்று கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க, அதில் ஒன்றில் மேஜிக் கலைஞராகவும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதற்காக விஜய் ஒரு சில மேஜிக் வித்தைகளை பயிற்சி செய்து வருகின்றார்.

அதேபோல் தனுஷ் தற்போது The Extraordinary Journey of the Fakir என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் தனுஷ் ஒரு மேஜிக் கலைஞராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் விஜய்யும், தனுஷும் மேஜிக் கலைஞர்களாக நடித்து வருகின்றனர்.