Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-aishwarya-1

Photos | புகைப்படங்கள்

மனைவியை பிரிந்த சோகத்தில் நைட் பார்ட்டி கொண்டாடிய தனுஷ்.. வாரிசு நடிகையுடன் வைரல் புகைப்படம்

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் தற்போது வசூல் வேட்டையாடி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரின் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகியுள்ளதால் பலத்த வரவேற்பும் கிடைத்து வருகிறது. இதனால் தனுஷ் உட்பட படகுழுவினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் கலந்து கொண்ட பார்ட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 80 காலகட்ட தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ராதிகா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Also read: என்ன பொண்ணுடா! 15 கிலோ உடல் எடையை குறைத்து வேற லெவலுக்கு மாறிய வரலட்சுமியின் புகைப்படங்கள்

அவர் சில தினங்களுக்கு முன் தன்னுடைய 60 வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த கொண்டாட்டத்தில் பிரபல நடிகர், நடிகைகள் உட்பட பலரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். அந்த பார்ட்டிக்கு நடிகர் தனுஷும் வருகை தந்திருக்கிறார்.

விவாகரத்துக்கு பிறகு இது போன்ற நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த அவர் தற்போது இந்த பார்ட்டியில் கலந்துகொண்டு அனைவரிடமும் உற்சாகத்துடன் பேசி இருக்கிறார். மேலும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படமும் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.

Also read: திருச்சிற்றம்பலம் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வரிசையில் சேருமா.? ஆறே நாளில் வாயை பிளக்க வைத்த வசூல்

அதில் இருவரும் கருப்பு நிற உடை அணிந்து மிகவும் நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள் விவாகரத்துக்கு பிறகு தான் தனுஷ் சந்தோஷமாக இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

dhanush-varalakshmi

dhanush-varalakshmi

Also read: முரட்டுத்தனமாக ஜிம் ஒர்க் அவுட் செய்யும் மாளவிகாவின் HOT புகைப்படங்கள்.. தனுசை அடுத்து சிக்க போவது இவர்தான்!

Continue Reading
To Top