fbpx
Connect with us

Cinemapettai

பொந்தில் சிக்கிய எலி போலான சிவகார்த்திகேயன், தனுஷ் படங்கள்.. போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கல்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொந்தில் சிக்கிய எலி போலான சிவகார்த்திகேயன், தனுஷ் படங்கள்.. போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன். இருவருக்கும் தனித்தனியாக ரசிகர் பட்டாளங்கள் உள்ளது.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய ஹீரோவாக வளர்ந்ததற்கு தனுஷ் மிகவும் உதவி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இருவருமே தங்களுடைய சினிமா கேரியரில் உச்சத்தில் இருக்கின்றனர்.

இருவருமே தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படமும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படமும் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.

இந்நிலையில் இருவரும் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் சிக்கலில் சிக்கியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சினிமாவில் போதைப்பொருள் விவகாரம் தலைதூக்க பல முன்னணி நடிகர் நடிகைகள் தொடர்ந்து அதில் சிக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் நடிக்கும் நடிகைகள் அந்த பிரச்சனையில் மாட்டியுள்ளதால் அவர்களது படங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் ரகுல் பிரீத் சிங்.

அதேபோல் தனுஷின் இந்திப் படமான அற்றங்கிரே எனும் படத்தில் நடிப்பவர் சாரா அலி கான். இந்நிலையில் இந்த இரண்டு நடிகைகளும் போதைபொருள் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அயலான் படப்பிடிப்பு வெறும் 15 நாட்களே உள்ள நிலையில் அந்த படம் பெரிய சிக்கலில் மாட்டியுள்ளது. அதேபோல் தனுஷ் படமும் சிக்கியுள்ளதால் இவர்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தற்போது சோகத்தில் இருக்கின்றனர்.

Continue Reading
To Top