பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்த தனுஷ், சிவகார்த்திகேயன்.. பஞ்சாயத்தை முடித்து வைத்த வைரல் புகைப்படம்

Dhanush-Sivakarthikeyan:கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் தனுஷ் சிவகார்த்திகேயன் தரப்பு ரசிகர்களுக்குள் பெரும் பஞ்சாயத்து நடந்து வருகிறது. ரஜினி கமல், விஜய் அஜித் போல் இந்த இருவருக்கும் இடையே நீண்ட காலமாக ஒரு பனிப்போர் இருக்கிறது.

dhanush-sivakarthikeyan (2)
dhanush-sivakarthikeyan

சிவகார்த்திகேயனுக்கு ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட பெருமை தனுஷுக்கு உண்டு. ஆனால் அதன் பிறகு அவர் டாப் ஹீரோ அந்தஸ்தை அடைந்தார். அப்போதிலிருந்து ரசிகர்களின் சண்டை ஆரம்பித்துவிட்டது.

போதாத குறைக்கு கொட்டுக்காளி ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் எனக்கு வாழ்க்கை கொடுத்ததா பல பேர் சொல்றாங்க. அந்த மாதிரி நான் யாரையும் சொல்ல மாட்டேன் என கூறியிருந்தார். உடனே தனுஷ் ரசிகர்கள் இதை சர்ச்சையாக மாற்றினார்கள்.

தனுஷ், சிவகார்த்திகேயன் வைரல் புகைப்படம்

அந்தப் பஞ்சாயத்து இன்னும் ஓய்ந்த பாடில்லை. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி இரு தரப்பு ரசிகர்களையும் வாயை பிளக்க வைத்திருக்கிறது.

அதாவது தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரும் ஒரு தனிப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட போட்டோ வைரலாகி வருகிறது. அதில் இருவரும் சிரித்த முகத்துடன் இருக்கின்றனர். பல வருடங்களுக்கு பிறகு இருவரும் சந்தித்துக் கொண்ட இந்த சம்பவத்தை தான் நெட்டிசன்கள் ஆச்சரியத்தோடு பேசி வருகின்றனர்.

இதன் மூலம் ஒட்டுமொத்த பிரச்சனையையும் அவர்கள் முடித்து வைத்திருக்கின்றனர். என்னதான் தொழில் ரீதியாக போட்டி இருந்தாலும் திரை பிரபலங்களை பொருத்தவரையில் எதையும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். அப்படித்தான் இந்த ஒரு யதார்த்த சந்திப்பும் உள்ளது.

திடீரென சந்தித்துக் கொண்ட தனுஷ் சிவகார்த்திகேயன்

Next Story

- Advertisement -