செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

என்ன மாமே கல்யாண கேசட் பாத்தியா?. தனுஷ்-சிம்பு சந்திப்பு.. நயன்தாராவ மொத்தமா முடிச்சு விட்டுட்டாங்களே!

Nayanthara: நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு என்று சொல்வார்கள். அது நடிகை நயன்தாராவின் சமீபத்திய நிலைமைக்கு தான் சரியாக பொருந்தும் போல. டாக்குமென்டரி வீடியோ வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு தனுஷ் மீது பெரிய குற்றச்சாட்டை வைத்தார் நயன்தாரா.

தன்னை ஒரு பாதிக்கப்பட்ட நபராக காட்டிக் கொண்டு, எப்படியாவது அந்த கல்யாண கேசட்டை விற்று விட வேண்டும் என நயன்தாரா திட்டம் போட்டு இருக்கிறார் என அப்போதே பேச்சுக்கள் எழுந்தது. அதை தொடர்ந்து எதிர்பாராத விதமாக இருவரும் இட்லி கடை பட தயாரிப்பாளரின் கல்யாணத்தில் சந்திக்க வேண்டிய சூழ்நிலை.

நயன்தாராவ மொத்தமா முடிச்சு விட்டுட்டாங்களே!

நயன்தாரா தானே நீலாம்பரி ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு தனுஷ் பக்கம் திரும்பாமல் வில்லத்தனமாக இருந்தார். அதே இடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனுஷை ஆற தழுவி தன்னுடைய அன்பை வெளிப்படுத்து இருந்தார்.

தனுஷ் சிவா மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி சிவகார்த்திகேயனுடன் சந்தோஷமாக பேசும் புகைப்படங்கள் வெளியானது. அப்போதே நயன்தாராவின் ஆட்டிட்யூட் தான் சரி இல்லை என பேசப்பட்டது. போதாத துறைக்கு நேற்று இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாசின் திருமண சங்கீத் நடைபெற்றிருக்கிறது.

இதில் தனுஷ் மற்றும் சிம்பு கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் சந்தித்ததும் கட்டி அணைத்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தியதோடு நிறைய புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பெரிய வைரல் ஆகி வருகிறது. இருவரும் நட்பாக பேசிக் கொள்வது போல் நிறைய மீம்ஸ்கள் வலம் வருகின்றன. அதிலும் என்ன மாமே கல்யாண கேசட் பாத்தியா என்று கேட்கும் மீம்மெல்லாம் அட்ராசிட்டி தான்.

தன்னை பாவமாக பார்ப்பார்கள் என்று எதிர்பார்த்து நயன்தாராவுக்கு இது பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. மேலும் தன்னுடைய சுய கதை கொண்ட டாக்குமென்டரி படத்திற்கே வரவேற்பு இல்லை என்னும் போது நயனின் மார்க்கெட் குறைந்துவிட்டது எனவும் அரசல் புறசலாக பேசப்படுகிறது.

- Advertisement -

Trending News