Tamil Cinema News | சினிமா செய்திகள்
செல்வராகவனுடன் மாஸாக வரும் தனுஷ்.. எந்த படத்தின் இரண்டாம் பாகம் தெரியுமா?
செல்வராகவன் எனும் சினிமா பல்கலைக்கழகத்திலிருந்து செதுக்கி அனுப்பப்பட்டவர் தான் நடிகர் தனுஷ். என்னதான் சினிமா பின்புலத்தில் சினிமாவுக்குள் வந்திருந்தாலும் பல்வேறு அவமானங்களுக்கு பிறகுதான் தனுஷ் சினிமாவில் தற்போது இந்த உயரத்தை அடைந்துள்ளார்.
அதற்கு மிக முக்கிய காரணம் செல்வராகவன் எனும் மாமனிதன் தான். செல்வராகவனின் படங்கள் எதுவுமே அவரது கற்பனையை சொல்லும்போது கொண்டாடப்படுவதில்லை. அவரது படங்கள் வெளியாகி சில வருடங்கள் கழித்தே கொண்டாடப்படுகிறது. செல்வராகவனின் கற்பனைகள் மற்ற மனிதர்களை விட பத்து வருடம் முன்னிலையில் இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய விஷயம். எதிர்காலத்திற்கு தேவையான கருத்துக்களை முன்னாடியே கொடுப்பதில் வல்லவர் திகழ்கிறார்.
அந்த வகையில் தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. வசூல் ரீதியாக அந்தப்படம் சரியாக அமையவில்லை என்றாலும் அந்த படத்தின் கதைகளம் தற்போது உள்ள இளைஞர்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது. ஒரு கேங்க்ஸ்டர் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. மேலும் எந்த ஒரு ஹாலிவுட் படங்களையும் காப்பி அடிக்காமல் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் கொக்கி குமாரு என்ற கதாபாத்திரம் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயமான தாக உள்ளது. இதனால் தற்போது செல்வராகவன் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுத ஆரம்பித்து விட்டதாகவும் அதில் கண்டிப்பாக தனுஷ்தான் நடிக்கிறார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
செல்வராகவன் கதை எழுதி முடிக்க குறைந்தது ஒரு வருடத்திற்கு மேலாக எடுத்துக் கொள்வார். அதற்குள் தனுஷ் ஏற்கனவே கமிட் செய்த படங்களை எல்லாம் முடித்து விட்டு வருவதாக செல்வராகவனுக்கு வாக்கு கொடுத்திருப்பதாக அவர்களின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
