தமிழ் சினிமாவில் இரண்டு முன்னணி நடிகர்கள் இணைகிறார்கள் என்றால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் ஆனால் முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கும் படங்கள் அபூர்வமாக தான் வெளிவந்து கொண்டிருக்கிறது அந்த வகையில் தற்பொழுது தனுஷ் மற்றும் சசிகுமார் இணைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

dhanush

இயக்குனர் கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் படபிடிப்பு முடியும் நிலையை நோக்கி வந்துள்ளது இந்த நிலையில் இந்த படத்தில் தற்பொழுது சசிகுமார் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது இந்த தகவல் உண்மை என்றால் இயக்குனர் கௌதம் நடிகர் சசிகுமாருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுத்திருப்பார் என கூறபடுகிறது.

dhanush

இந்த படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா என பல நட்சத்திரங்கள் நடிக்க இந்த படத்தை ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது ஜாமோன் ஜான் ஒளிப்பதிவில் ப்ரவீன் ஆண்டனி படத்தொகுப்பில் தர்புகா சிவா இசையில் உருவாகிவரும் இந்த படம் இந்த வருடத்தில் வெளியாகும் என கூறுகிறார்கள்.