Connect with us

Cinemapettai

தனுஷ், ‘ராட்சசன்’ ராம்குமார் இணையும் படத்திற்கு இவ்வளவு சாதாரண டைட்டிலா? எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள்

dhanush-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷ், ‘ராட்சசன்’ ராம்குமார் இணையும் படத்திற்கு இவ்வளவு சாதாரண டைட்டிலா? எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். தனுஷ் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகி வரிசையாக பல படங்கள் வெயிட் செய்து கொண்டிருக்கின்றன.

ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. அடுத்ததாக அற்றங்கி ரே என்ற பாலிவுட் படம் மற்றும் அதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 எனும் படத்தில் நடிக்க உள்ளார்.

பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ராட்சசன் படம் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார்.

கார்த்திக் நரேன் படத்திற்கு முன்னரே ராம்குமார் படம் தொடங்க இருந்த நிலையில், ராம்குமார் இன்னும் மொத்த கதையையும் எழுதி முடிக்காத நிலையில் தான் அந்த பட வாய்ப்பு கார்த்திக் நரேனுக்கு சென்றது.

அந்தப் படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. தற்போது முழுமையாக தயாராகி ரெடியாக இருக்கும் ராம்குமார் படத்திற்கு வால் நட்சத்திரம் எனப் பெயர் வைத்துள்ளார்களாம்.

முண்டாசுபட்டி மற்றும் ராட்சசன் ஆகிய படங்களை தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பில் இருந்த தனுஷ் படத்திற்கு இவ்வளவு சாதாரணமான டைட்டிலா என சோகத்தில் உள்ளனராம் ரசிகர்கள்.

dhanush-ramkumar-cinemapettai

dhanush-ramkumar-cinemapettai

சயின்டிஃபிக் திரில்லராக உருவாக இருக்கும் வால் நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top