புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தலைவருக்கு வாக்கு கொடுத்த தனுஷ்.. திடீர் சந்திப்புக்கான காரணம் இதுவா.?

Dhanush: தனுஷ் இப்போது நடிப்பு இயக்கம் என ரொம்பவும் பிசியாக இருக்கிறார். அவருடைய நடிப்பில் குபேரா உருவாகி வருகிறது. அதே போல் அவர் தயாரித்து இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்துக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அது மட்டுமின்றி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் அவர் இயக்கி முடித்துள்ளார். அடுத்த மாத இறுதியில் இப்படம் திரைக்கு வருகிறது. இந்த சூழலில் அவருடைய விவாகரத்து பற்றிய செய்தி கசிந்துள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா சில வருடங்களுக்கு முன்பு தங்களுடைய விவாகரத்து செய்தியை அறிவித்தனர். அதன் பிறகு பல மாதங்கள் கழித்து தான் அவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதனால் அவர்கள் சேர்வார்கள் என்ற ரசிகர்களின் நம்பிக்கை தகர்ந்து போனது.

ஆனால் தற்போது ஒரு இனிப்பான செய்தி அவர்களுக்கு வந்துள்ளது. அதாவது இந்த வழக்கு விசாரணையில் இரண்டு முறை தனுஷ், ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதேபோல் சில தினங்களுக்கு முன்பு நடந்த விசாரணைக்கும் அவர்கள் வரவில்லை.

மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா

அதனால் இவர்கள் இருவரும் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் பேசி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் மற்றொரு சம்பவமும் நடந்திருக்கிறது.

அதன்படி தீபாவளி பண்டிகைக்கு தனுஷ் தன் மாமனார் ரஜினியை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது அவர்கள் மனம் விட்டு பல விஷயங்களை பேசி இருக்கின்றனர். அதில் தனுஷ் தன் தரப்பு நியாயத்தையும் சொல்லியிருக்கிறார்.

அதேபோல் நிச்சயம் நாங்கள் இணைவோம் என ரஜினிக்கு அவர் வாக்கு கொடுத்திருக்கிறாராம். அது மட்டும் இன்றி அன்றைய தினத்தை அவர் தன் மனைவி பிள்ளைகளுடன் பட்டாசு வெடித்து ரொம்பவும் சந்தோஷமாக கொண்டாடி இருக்கிறார்.

இப்படி ஒரு செய்தி போயஸ் கார்டன் வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளது. ஏற்கனவே சினிமா விமர்சகர்கள் தனுஷ் ஐஸ்வர்யா இணைய போகிறார்கள் என குறிப்பிட்டு இருந்தனர். தற்போதைய தகவலும் அதை உறுதி செய்துள்ளதால் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல ரசிகர்களும் இப்போது சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

Trending News