Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜிவி பிரகாஷை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திய தனுஷ்.. பஞ்சாயத்து பாக்கி இருக்கு போல
தமிழ் சினிமாவில் படங்களுக்குள் போட்டி இருப்பது சகஜம்தான். ஆனால் கலைஞர்களுக்கு பகை இருப்பது ஆபத்தானது. என்னதான் அதை பூட்டுப் போட்டு பூட்டி வைத்திருந்தாலும் முக்கியமான இடங்களில் அது பச்சையாக வெளிப்பட்டுவிடும். அப்படித்தான் வெளியானது தனுஷ், ஜிவி பிரகாஷ் பஞ்சாயத்து.
ஒருகாலத்தில் தனுஷ், ஜிவி பிரகாஷ் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். தனுஷ் ஜிவி பிரகாஷ் கூட்டணியில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் போன்ற படங்களில் பாடல்களை பற்றி சொல்லவா வேண்டும். மரண ஹிட் பாடல்களை தனுஷுக்காக கொடுத்துள்ளார்.
ஆனால் செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படத்தின் போது இருவருக்கும் சிறு மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே வடசென்னை படத்தில் வெற்றிமாறன் ஜிவி பிரகாஷ் வேண்டும் என்று கூறிய போதிலும் தனுஷ் அடம்பிடித்து சந்தோஷ் நாராயணனை சேர்த்தார்.
அப்போதே இது பெரிய பிரச்சனையாக வளர வேண்டியது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதால் வெற்றிமாறன் வேறு வழியில்லாமல் அடங்கிப் போனார். அதை அசுரன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு என்பதால் முன்னரே ஜிவி பிரகாஷ் தான் இசையமைப்பாளராக வேண்டுமென வெற்றிமாறன் கூறிவிட்டார்.
அசுரன் பாடல் வெளியீடுகளின் போது கூட படத்தின் இசையமைப்பாளரான ஜிவி பிரகாசை கண்டுக்கவே இல்லை. அதன் பிறகு வெற்றிமாறன் அழைத்து முன்னாடி நிற்க வைத்தார் என்பது அந்த வீடியோ பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அதைப்போல் தான் தற்போது அசுரன் படத்தின் நூறாவது நாள் விழாவில் நடந்துள்ளது.

gv-prakash
ஜிவி பிரகாஷ் யாரோ ஒருவர் போல மேடையில் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தார். கூட பேச போட ஆள் இல்லை என்பதே விவாதத்துக்குரிய விஷயமாக அமைந்தது. அசுரன் படத்தின் வெற்றிக்கு கதை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு பின்னணி இசையும் பாடல்களும் இருந்தது தான் என்பதை தனுஷ் ரசிகர்களே ஒப்புக்கொண்டனர்.
அப்பேர்பட்ட கலைஞருக்கு மரியாதை கொடுக்காமல் அசிங்கபடுத்தியதால் தனுஷ் இன்னமும் தனது வஞ்சத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்னதான் சினிமாவில் நல்லவர்களாக நடித்தாலும் பகை என்று வந்துவிட்டால் மிச்சமில்லாமல் அழித்து விடுகிறார்கள்.
ஏற்கனவே தனுஷ் அசுரன் பட வெளியீட்டின்போது தயாரிப்பாளர்களை நேரடியாக தாக்கியது பெரிய செய்தியாக வந்தது. பட தொடக்கத்தின் போதே முழு சம்பளத்தையும் கொடுத்த கலைப்புலி தாணுவை உயர்த்தியும் இதற்கு முன் அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களை தாழ்த்தியும் பேசினார்.
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவரும் படங்களை தவிர மற்ற படங்கள் அனைத்துமே சுமாராகத்தான் ஓடுகிறது. அதை முதலில் தனுஷ் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
