செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

இழுத்தடிக்கும் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து.. உத்தரவிட்ட நீதிபதி

Dhanush : தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு மனம் ஒத்து பிரிய போவதாக அறிவித்தனர். இதை அடுத்து இருவரும் இணைந்து விடுவதாக செய்திகள் வெளியானது. ஆனால் குழந்தைகள் விழாவில் மட்டுமே இருவரும் ஒன்றாக பங்கு பெற்று வருகிறார்கள்.

மேலும் சமீபத்தில் ஐஸ்வர்யா போடும் இன்ஸ்டா பதிவிற்கு தனுஷ் லைக் செய்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருமே தங்களுக்கு விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த அக்டோபர் ஏழாம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இருவருமே ஆஜராகவில்லை. இதை அடுத்து அக்டோபர் 19ஆம் தேதி இந்த வழக்கை தள்ளி வைத்திருந்தனர். அப்போதும் இவர்கள் ஆஜராகாத நிலையில் நவம்பர் இரண்டாம் தேதி ஆன இன்று மீண்டும் விசாரணைக்கு நீதிமன்றம் அழைத்துள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்தில் நடக்கும் இழுபறி

ஆனால் இன்றும் இவர்கள் நீதிமன்றத்திற்கு வரவில்லை. ஒருவேளை இருவரும் மீண்டும் இணையும் திட்டத்தில் இருப்பதால் மூன்று முறையும் ஆஜராகவில்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது மிகவும் தவறானது.

இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வழக்கின் நீதிபதியான சுபா தேவி இந்த வழக்கை வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார். இந்த முறை கட்டாயம் அவர்கள் இருவரும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்திற்கு நவம்பர் 21 ஆம் தேதி முற்றுப்புள்ளி வைக்கிறார்களா என்பது பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் இருவரும் மீண்டும் இணைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

Trending News