வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கோர்ட்டில் ஆஜர் ஆன தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. அப்போ அம்புட்டும் கட்டு கதையா!

Dhanush: நடிகர் தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்திருந்தனர். மற்ற ஜோடிகளை போல் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக தெரிவித்து இருந்தார்கள்.

மேலும் எந்த ஒரு பேட்டிகளிலும் தங்களுடைய முன்னாள் துணையை பற்றி எந்த ஒரு விஷயத்தையும் பேசாமல் இன்று வரை கண்ணியம் காத்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் அவர்களின் பள்ளி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கூட இருவரும் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள்.

மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவது ரஜினிகாந்த்திற்கு விருப்பம் இல்லை எனவும், இரு தரப்பில் இருந்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்பட்டது. இதற்கிடையில் சமீபத்தில் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்று வந்த போது கூட அடுத்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைவதாக அறிவிப்பு வரும் என்று பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இன்று தங்களுடைய விவாகரத்து தொடர்பாக குடும்ப நல கோர்ட்டில் ஆஜராகி இருக்கிறார்கள். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதல் ஆளாக கோர்ட்டுக்கு வந்து விட்டார். தனுஷ் வர தாமதமானதால் இந்த வழக்கு முதலில் மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தனுஷ் வந்தவுடன் வழக்கு விசாரிக்கப்பட்டது.

இருவருமே தங்களது பிரிவில் ரொம்பவும் உறுதியாக இருப்பதால் நவம்பர் 27ஆம் தேதி விவாகரத்து வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இருவரும் சேர அதிக வாய்ப்பு இருப்பதாக நிறைய கதைகள் வெளி வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் இருவருமே சேருவதற்கு விருப்பமில்லை என்று நீதிமன்றத்திலேயே சொல்லி இருப்பதால். இதுவரை வெளிவந்தவை அத்தனையும் கட்டுக்கதை என தெரிய வந்திருக்கிறது.

- Advertisement -

Trending News