Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-aishwarya-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் ஒன்று சேர்ந்த தனுஷ், ஐஸ்வர்யாவின் புகைப்படம்.. விவாகரத்துன்னு சொன்னதெல்லாம் கட்டுக்கதையா!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மனமொத்து பரஸ்பரமாக பிரிய போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இவர்களை இணைப்பதற்காக நண்பர்கள், பெற்றோர்கள் என பலரும் முயற்சி செய்தும் எல்லாமே தோல்வியை தழுவியது. அதன்பின்பு தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே தங்களது பட வேலைகளில் பிஸியாக இருந்தனர்.

ஆனால் தனுஷ் தனது பட புரமோஷன் வேலைகள் அல்லது சில விழாக்களில் தனது மகன்களுடன் வருவதை பார்க்க முடிந்தது. அதேபோல் ஐஸ்வர்யாவும் தன் மகன்களை சந்திக்கும்போது எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.

Also Read : சன் டிவியை பலி வாங்கிய தனுஷ்.. நீங்க கூப்பிடற இடத்துக்கு எல்லாம் மணியாட்ட முடியாது!

இதனால் மகன்களுக்காக இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என பலரும் எதிர்பார்த்தனர். தற்போது அது நிகழ்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதாவது தனுஷ், ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா ஸ்போர்ட்ஸ் இல் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.

இப்போது இதில் யாத்ராவிற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதைக் கொண்டாடும் விதமாக ஐஸ்வர்யா, தனுஷ் அவர்களது மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் பாடகர் விஜய் யேசுதாஸ் அவரது குடும்பமும் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்.

Also Read : தனுஷை சுத்து போட்ட கூட்டம்.. நடிகையை அலேக்கா காப்பாற்றிய தனுஷ்

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரே போட்டோவில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஒன்றாக இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவாகரத்து என்று சொன்னாலும் பல பிரச்சனைகளை தாண்டி தனது மகன்களுக்காக இவர்கள் ஒன்றாக சேர்ந்துள்ளனர்.

சமீபத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கேரியரில் செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ள தனுஷ் மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Also Read : பாக்ஸ் ஆபிஸை சுக்குநூறாக்கிய ‘திருச்சிற்றம்பலம்’.. முதல் நாள் கலெக்சன்

Dhanush and Aishwarya are back together after their divorce announcement

Dhanush and Aishwarya are back together after their divorce announcement

Continue Reading
To Top